தொகுப்பு

Archive for the ‘மற்றவை’ Category

நூறாவது பதிவு

நவம்பர் 25, 2009 1 மறுமொழி


அட நம்ம வந்து அதுக்குள்ள நூறாவது பதிவா என எனக்கு ஆச்சர்யம் வந்தாலும் நான் தேர்ந்தெடுத்த பதிவர்களின் வழியே நான் வந்ததால் அதற்குள் அடைந்து விட்டேன். இந்த நூறாவது பதிவின் மூலம் நான் புதிதாக எதையும் சொல்ல போவதில்லை . நான் பதிவு எழுத வேண்டும் என்று என்னை தூண்டிய என் அருமை மனைவிக்கு என் முதல் நன்றி. சரி பதிவு எழுதலாம் எப்படி எழுதுவது , ப்லோகை எப்படி உருவாகுவது என் நான் தலை சுற்றி நின்ற போது சில மூத்த பதிவர்களின் வலைகளை மேலாக பார்வை இட்டேன் . ஒருவாறு எழுத ஆரம்பித்த போது பதிவை எழுதுவதை விட பதிவுகளை நிறைய வசிக்க ஆரம்பித்தேன் .

அப்படி நான் நேசித்த பதிவர் ஐயா ஷண்முகப்ரியன் , எனது முதல் follower-ஆக வந்து சேர்ந்து எனக்கு ஊக்கம் தந்தார். இன்று படிப்படியா வந்து நூறாவது பதிவை அடைந்திருக்கிறேன் என்றால் அது அவர் போன்றோரின் ஆசியே ஆகும். உங்களின் தாக்கமே எனது விடுகதை – தொடர் .

அடுத்து ஹாலிவுட் பாலா மற்றும் கேபிள் சங்கர் போன்றவர்களின் படைப்பு திறனில் வியந்து இருக்கிறேன். அதுவே எனது வகான்சி திரை விமர்சனம் மற்றும் கத்திரிப்பூ தாவணி பதிவுகளின் தாக்கம் .

அதேபோல் நான் கவிதை போல எதோ எழுதுவதற்கு க. பாலாசி அவர்களின் பதிவின் தாக்கமே .

இப்படி பல பதிவர்கள் தங்களின் படைப்பு திறனில் இருந்து எனக்கு சொல்லி கொடுத்தனர் . இன்னும் நான் வளராத பறவைதான் இருந்தாலும் தன் முதல் சில அடிகளே பறந்த பறவை எதோ சாதனை செய்தது போல் உணருமே அந்த உணர்வே இந்த பதிவு . எனது எழுத்துகளில் பிழைகள் இருக்கலாம் கோர்வையாய் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எழுத வேண்டும் என்ற தவிப்புக்கு, பதிவர்கள் என் மேல் வைத்த அன்புக்கு முன்னால் இவை மறைந்து விடுகிறது.

இன்னும் பல பதிவர்களை பற்றி எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் பதிவு நீளம் போய் கொண்டே இருக்கும் இரு நூறு பதிவு வரை. அடுத்தடுத்த பதிவுகளில் கண்டிப்பாக அவர்களை பற்றி எழுதுவேன். இதுவரை தந்த ஆதரவுக்கும் இனி தரப்போகும் ஆதரவுக்கும் என் நன்றிகள் …..

Advertisements
பிரிவுகள்:மற்றவை

கிரிக்கெட் எளிதாக தெரிந்து கொள்ள

பிரிவுகள்:மற்றவை

சோப்பு ஜோசியம்


குளிக்கும் போது முதன் முதலில் நாம் சோப்பு போடும் இடத்தை வைத்து இந்த ஜோசியம் முன் வைக்கப் படுகிறது .

தலை : எந்த காரியத்தையும் உடனே முடிக்க வேண்டும் என்று நினைபவர்கள் . நாம் தனியாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் .

முகம் : முன் யோசனை இல்லாமல் செயல் பட கூடியவர்கள் .

கழுத்து : ரெம்ப பொறுமையான ஆசாமிகள் .

மார்பு: எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைக்கும் .. ரெம்ப நல்லவங்க …

தோள்: மத்தவங்களுக்கு பாரமா இருக்கவே மாட்டாங்க ..

கைகள் : பிறர்க்கு குடுத்து இவங்க சளைக்கவே மாட்டங்க … தர்ம பிரபுக்கள் ..

வயிறு : எப்பிடி சாப்பிட வேண்டும் என்று இவங்கள பார்த்து தெரிஞ்சுக்கணும் ..

தொடை : ரெம்ப ரெம்ப யோசிக்கிற டைப்

கால்கள் : இவங்க முடிவு எடுத்தா எடுத்ததுதான் ….

பின் குறிப்பு : மேற்கண்ட ஜோசியம் நூற்றுக்கு 99 பேருக்கு பலித்திருக்கிறது . ஒருவேளை உங்களுக்கு பொருந்த வில்லை என்றால் விடுபட்ட அந்த ஒருவர் தாங்களே .

பிரிவுகள்:மற்றவை

புதிய ப்ளாகருக்கு மாறலாம் வாங்க!!

புதிய ப்ளாகருக்கு மாறலாம் வாங்க!!!

புதிய ப்ளாகருக்கு மாற ஆசையிருந்தும் அதிக பதிவுகள் இருப்பதால் மாற முடியாமல் வருத்தப்படுபவர்களுக்கு…

இது எங்க சங்க தளபதி எனக்கு சொல்லி கொடுத்த விஷயம். சரினு உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த பதிவு.

சரி, முதல்ல விஷயத்துக்கு வரேன். இப்ப நீங்க லாகின் செய்வது உங்களுடைய ப்ளாகர் அக்கவுண்ட் பயன்படுத்தி
உதாரணம்
User ID : userid_1

ஆனால் புதிய ப்ளாகருக்கு Google Account பயன்படுத்த வேண்டும். அதாவது உங்கள் Gmail ID
உதாரணம்
EMail ID : emailid_1@gmail.com

தற்போது தாங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு மற்றொரு gmail id உருவாக்கி கொள்ளவும்.
உதாரணம்
EMail ID : emailid_2@gmail.com

உங்களுடைய userid_1ல் உள்ளே சென்று emailid_2@gmail.com விற்கு அழைப்பு விடுக்கவும். உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் அழைப்பு விடுத்து கொள்ளலாம். பிறகு emailid_2வில் சென்று அழைப்பை ஏற்று கொள்ளவும். தற்போது அதில் ஒரு புது லாகின் ஐடி உருவாக்கி கொள்ளவும்.
உதாரணம்
User ID : userid_2

இன்னும் நீங்கள் பழைய ப்ளாகரிலே இருக்கிறீர்கள். தற்போது தங்கள் பழைய ஐடியை பயன்படுத்தி உள்ளே செல்லவும் (userid_1)
தங்களுடைய புது ஐடிக்கு அட்மின் உரிமையை கொடுக்கவும். (Admin Permissions)

தற்போது உங்கள் புது ஐடியை பயன்படுத்தி உள்ளே சென்று பழைய ஐடிக்கு இருக்கும் உரிமையை நீக்கவும். (Go to Permissions and remove the old blogger)

மீண்டும் உங்களுடைய பழைய ஐடியை பயன்படுத்தி உள்ளே சென்று புதிதாக ஒரு வலைப்பூ தொடங்கவும். தற்போது உங்கள் புதிய ஐடியில் இந்த ஒரு புதிய வலைப்பூ மட்டுமே இருக்கும். அதை புதிய ப்ளாகருக்கு மாற்றவும். அது எளிதாக மாறிவிடும். அதற்கு தங்களுடைய emailid_1@gmail.com பயன்படுத்தி கொள்ளவும்.

பின்பு மீண்டும் userid_2 பயன்படுத்தி உள்ளே செல்லவும். அது உங்களுடைய பழைய ப்ளாகரை புதிய ப்ளாகருக்கு மாற சொல்லி கேட்கும். அதை மாற்ற சம்மதித்து அதில் மீண்டும் உங்கள் emailid_1@gmail.com கொடுக்கவும். உங்களுடைய ப்ளாக் தற்போது புது ப்ளாகருக்கு மாறியிருக்கும். தற்போது புதிய ப்ளாகரில் emailid_1@gmail.com கொடுத்து உள்ளே செல்லவும். அங்கே தங்களுடைய வலைப்பூ புதிய ப்ளாகருக்கு மாறியிருப்பதை பார்க்கலாம்…

சீக்கிரம் மாறிடுங்க..

நண்பர் ஒருவரிடமிருந்து பெற்றது ….

பிரிவுகள்:மற்றவை

மனதினையும் தொட்டுச்செல்லும் ஒரு சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று!

பிரிவுகள்:மற்றவை

Tips to create a Strong Password easily..!!!

How to create a Strong Password.This lead me to explain the method I follow to set a password – A Strong Password indeed by all standards.You must follow the following criteria while creating a Strong Password:* The password must be a minimum of 8+ characters.* The password must have 1 number , 1 special character, 1 Upper Case character.A very simple example that I use to explain my friends and colleages is : P@ssw0rd. It fullfills all the criteria’s. The ‘a’ is replaced by a special character @. The ‘P’ is of upper case. The ‘o’ is replaced by the numeral 0.Well, you can now convert your regular password into a Strong Password by following a few changes like the example I have mentioned above for the simple password – P@ssw0rd.* Make the first character Upper Case.* Change all ‘a’ in the password to the special character @.* Change all ‘s’ in the password to the special character $.* Change all ‘l’ in the password to the special character !.* Change all ‘o’ in the password to the numerical 0.* Change all ‘i’ in the password to the numerical 1.

பிரிவுகள்:மற்றவை

கனவு

செப்ரெம்பர் 30, 2009 பின்னூட்டமொன்றை இடுக

தினம் தினம் காணும் ஒரே கனவு
உன் முகம் தெரியாமல் ….
பிரிவுகள்:மற்றவை