தொகுப்பு

Archive for the ‘சிறுகதைகள்’ Category

ஒரு ஜென் (ஜெம்) கதை


ஒரு ஊரில் அறிவு மிகுந்த ஜென் துறவி வாழ்ந்து வந்தார் . ஊருக்கு வெளியில் ஆசிரமம் அமைத்து தன் மாணவர்களுக்கு வாழ்கையை பாடமாக சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் . அறிவும் அனுபவமும் மிக்க அந்த துறவியிடம் பாடம் கற்க நிறைய மாணவர்கள் வந்து விரும்பி கற்றனர். அப்படி கற்க வருபவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள் அல்லவா .

அவர்களில் சிலர் தாங்கள் முழுவதும் கற்று அறிந்து விட்டதாகவும் எனவே தங்கள் ஊர்களுக்கு திரும்பி போக முடிவு செய்துவிட்டதாக துறவியிடம் சொல்லி விட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றனர் . அந்த ஜென் துறவியோ எதுவுமே நடக்காதது போலத் புன்முறுவல் புரிந்தார் .

சில வருடங்களுக்கு பிறகு சொல்லாமல் சென்ற அந்த மாணவர்கள் மீண்டும் குருவை தேடி வந்தனர். அவர்களை குரு அன்புடன் வரவேற்றார் . தாங்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் இருந்தும் மன நிம்மதி இல்லை என் குறை பட்டனர் . மீண்டும் அந்த ஜென் துறவி புன்முறுவல் புரிந்தார்.

அவர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்க ஏற்பாடு செய்தார். தேநீர் கோப்பையும் ஊற்றி குடிபதற்காக காலி கோபைகளையும் அவர்கள் முன்னே வைக்கப்பட்டன .
காலி கோப்பைகள் வைரம் பதித்தவை, தங்கம் , வெள்ளி , அழகிய வேலைபாடு கொண்டவை , மண் மற்றும் கண்ணாடியில் செய்யப் பட்டவை என பல கோப்பைகள் இருந்தன . அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த கோப்பைகளை எடுத்துக் கொண்டனர் .

மீதமிருந்த மண் மற்றும் கண்ணாடி கோப்பைகளை கண்ட குரு சொன்னார் , நீங்கள் அனைத்து உயர்ந்த ரக கோப்பைகளை எடுத்து கொண்டதுடன் அருகில் இருந்தவருடன் உங்கள் கோப்பையை ஒப்பிட்டு கொண்டீர்கள். தேநீர் அருந்துவது தான் நோக்கமே அன்றி கோப்பை அல்ல . வாழ்க்கை என்பது தேநீர் போன்றது , பதவி , அதிகாரம் , பணம் போன்றவை கோப்பைகள் போன்றது . பல சமயம் நாம் கோப்பையில் தான் கவனத்தை வைக்கிறோம் ஆகையால் தான் நாம் வாழ்கையை இழக்கிறோம் . கோப்பை தேவையே அன்றி முக்கியமல்ல . இனிமேலாவது கோப்பைக்கு முக்கியத்துவம் தராமல் தேநீருக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்றார்.

வந்த மாணவர்கள் தாங்கள் தவறை உணர்ந்து வாழ்கையின் முக்கியத்துவத்தை உணர்த்திய குருவிற்கு நன்றி கூறி விடை பெற்றனர் .

Advertisements
பிரிவுகள்:சிறுகதைகள்

கத்திரிப்பூ தாவணி 6

ஆட்டோவில் இருந்து இறங்கிய மூவரும் என்னை கிழே இறங்க சொன்னார்கள் . கண்களில் மெல்ல நீர் கோர்த்து இருந்தது , கிழே இறங்கிய போது மெல்ல வீசி கொண்டிருந்த காத்து கூட சட்டேன்று நின்று விட்டது. மூவரில் அந்த நெடிசலானவன் மட்டும் மீண்டும் என்னை நெருங்கி வந்தான் . அவனே மீண்டும் பேசினான் ” வீடு வந்துருச்சு இறங்கிகங்க ” என்றான். இதற்கு தான் அம்மா என்னை திகில் நாவல்களை அதிகம் படிக்காதே என்று சத்தம் போட்டது நினைவுக்கு வந்தது.

வீட்டுக்கு வெளியே அம்மா எனக்காக காத்து கொண்டிருந்தாள். அதே தெருவில் கத்திரிப்பூ தாவணி காரிவீட்டிலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

இனிமேல் திகில் நாவல் என்றாலே எனக்கு வாழைப்பூ மாதிரி ….

கதையில் இரண்டு கன்னி முயற்சி :
கதாபாத்திரங்களுக்கு பெயர் இல்லை .
கதை சொல்வது அவனாகவும் அவளாகவும் இருப்பது …

தவறுகளை சுட்டி காட்டவும், தங்கள் வருகைக்கு நன்றி …

பிரிவுகள்:சிறுகதைகள்

கத்திரிப்பூ தாவணி 5

என் கைபேசி , எப்படி இதை மறந்தேன் நடந்த சம்பவங்கள் என்னை அந்த அளவிற்கு சிந்திக்க விடாமல் செய்து கொண்டிருந்ததால் இருக்கலாம் . இனி சற்று பயமில்லாமல் இருக்கலாம் . யாருக்காவது நாம் வந்து கொண்டிருப்பதை இவர்கள் அறியா வண்ணம் குறுஞ்செய்தி அனுப்பி விடலாம் . அது நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து என் வீட்டிற்கு அருகில் உள்ள தோழி ஒருத்திக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
இப்போது எந்த பள்ளத்திலும் ஏறி இறங்காமல் ஆட்டோ தானாக ஒரு ஓரமாக நின்றது. மூவரும் ஒரு சேர கிழே இறங்கினர் . எனது கைகள் தானாகவே கைபேசிக்கு சென்றது , கண்கள் மெல்ல கத்திரிப்பூ தாவணி பக்கம் சென்றது .

கத்திரிப்பூ பூக்கும் ….

பிரிவுகள்:சிறுகதைகள்

கத்திரிப்பூ தாவணி 4

திடீரென்று ஒரு பள்ளத்தில் ஏறிஇறங்கிய ஆட்டோ அப்படியே நின்று விட்டது . அவர்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் எதோ பேசி கொள்வது போலவே தோன்றியது. முதலில் வந்து பேசியவன் அவன் தான் இப்போதும் பேசினான் , ஆட்டோவில் சிறிய பிரச்சினை சில நிமிடங்களில் சரியாகிவிடும் என்றும் தெரிவித்தான். மூவரும் ஆட்டோவுக்கு பின்னால் சென்றனர் சிறிது நேரத்திற்கு எந்த பேச்சு குரலும் கேட்கவில்லை.
நாள் முழுவதும் நின்ற களைப்பால் அயர்ந்து விட்டுருந்தாள். அவளை விட்டு கிழே இறங்கவும் மனசில்லை . என்ன நடக்கிறது என்பதை அறியவும் ஆவல் ,மெதுவாக செருமினேன், அந்த நெடிந்த தேகம் தலையை மட்டும் எட்டி பார்த்து வண்டி சரியாகி விட்டது என்று தலை ஆட்டினான். வறண்ட என் உதடுகளை நனைப்பதற்கு தண்ணீர் பாட்டில் தேடினேன் அப்போது தான் பையில் அது சிக்கியது ஆபத்பாந்தவனாய் . இப்போது அவள் தாவணி மெதுவாக காற்றில் அசைந்தது .

கத்திரிப்பூ பூக்கும் ….
பிரிவுகள்:சிறுகதைகள்

கத்திரிப்பூ தாவணி 3

அந்த இருவரில் ஒருவன் சற்றே ஒல்லியாகவும் நெடிசலாகவும் இருந்தான் . விளக்கு வெளிச்சத்தில் அருகே வரும்போது தான் அவன் எங்களுடன் துணி கடையில் வேலை செய்பவன் என்பது தெரிய வந்தது. பேருந்து சென்று விட்டது எனவும் தங்களோடு வந்தால் ஆட்டோ பிடித்து அனுப்பி வைப்பதாகவும் சொன்னான் . நாங்கள் இருவரும் அதிகமாக யாருடனும் பழகாததால் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது . ஆனால் அவளோ உடனே சரி என்று தலை ஆட்டி விட்டாள்.

எனது பதிலுக்கு காத்திராமல் முன்னே செல்ல ஆரம்பித்து விட்டனர் . அவளும் நடக்க ஆரம்பிக்க அந்த தெரு திரும்பியவுடனே ஒரு ஆட்டோ நின்று கொண்டு இருந்தது . இந்நேரத்தில் எப்படி இங்கு ஒரு ஆட்டோ என்று நான் முழித்துக் கொண்டிருக்க அவளோ உடனே ஏறி உக்காந்து விட்டாள் . நானும் அவளும் பின்னால் உட்கார அவர்கள் எங்கள் நெருக்கத்தை தவிர்க்க விரும்பாமல் இருவரும் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள் . ஆட்டோ மெல்ல நகர ஆரம்பித்தது . அந்த இருள் சூழ்ந்த இரவிலும் நாம் போகும் பாதை சரிதானா என்று என் கண்கள் நோட்டமிட்டு கொண்டிருக்க அவளின் கத்திரிப்பூ தாவணி மட்டும் எந்த வித சலனமும் இன்றி அவளோடு ஒட்டி கொண்டிருந்தது .

கத்திரிப்பூ பூக்கும் ….

பிரிவுகள்:சிறுகதைகள்

கத்திரிப்பூ தாவணி 2

இருவரும் சேர்ந்து வேலை பார்த்த அந்த துணி கடையில் எப்போதும் கூட்டம் அலை மோதி கொண்டிருக்கும். மத்திய இடைவெளின் போது கூட சரியாக பேச முடியாது. இரவு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருக்கும் போது கிடக்கும் சிறிய இடைவெளிதான் எங்கள் நட்பு பரி மாறப் பட்டு வந்தது. அன்றும் அப்படித்தான் வேலை முடிந்து பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தோம். சற்று தள்ளி ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தின் விளக்கு வெளிச்சத்தில் இருந்து சற்று தள்ளி இருந்ததால் அவர்கள் யார் என்று தெரியவில்லை. வழக்கமாக வரும் பேருந்து சென்று விட அது தெரியாமல் காத்துக்கொண்டே இருந்தோம் . அந்த கும்பலில் இருந்து இருவர் மட்டும் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த பின்னிரவு வாடை காற்றிலும் எனக்கு லேசாக வேர்த்தது. நடப்பது எதுவும் தெரியாமல் அருகில் இருந்த அவளின் கத்திரிப்பூ தாவணி நுனி காற்றில் கோலமிட்டு கொண்டிருந்தது.

கத்திரிப்பூ பூக்கும் ……
பிரிவுகள்:சிறுகதைகள்

கத்திரிப்பூ தாவணி 1

அந்த கத்திரிப்பூ போட்ட தாவணி மேல் அவளுக்கு என்ன பிரியம் என்று தெரியாது வாரத்திற்கு நன்கு நாட்களாவது அதே தாவணியை போட்டு கொண்டிருப்பாள். அவளிடம் போதுமான துணிகள் இருந்தும் இந்த கத்திரிப்பூ போட்ட தாவணி தான் படாத பாடு பட்டது. நான் அவளிடம் ஏனோ இதை பற்றி ஒருபோதும் விவாதித்ததில்லை. அவளின் கள்ளமில்லா சிரிப்பும் அளவில்லா நட்பும் என்னை அவளோடு கட்டி போட்டு கொண்டிருந்தது அந்த கத்திரிப்பூ போட்ட தாவணி போல.

கத்திரிப்பூ பூக்கும் ……..

பிரிவுகள்:சிறுகதைகள்