தொகுப்பு

Archive for the ‘கட்டுரைகள்’ Category

பூனை குட்டியும் சில மணி கட்டாத மனிதர்களும்


கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை வீட்டை விட்டு வெளியே வருவதென்றால்
முட்டியளவு தண்ணீரில் நடந்து சிறிது நீச்சல் பழகி வர வேண்டும். ஏற்கனவே வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கி விட்டது கைகொடுத்தது . அன்று அதிகாலை சுமார் ஐந்தரை மணி இருக்கும் எதோ ஒரு வித்தியாசமான சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது . படுக்கையில் இருந்து எழுந்து சத்தம் வரும் திசையில் நடந்தேன் . வீட்டு வாசலுக்கு வெளியே இருந்து சத்தம் வருவது தெரிந்து கதவை திறந்தேன் .

ஒரு அழகான கருப்பு வெள்ளை பூனை குட்டி உடனே வந்து என் கால்களை நக்கி தன் பசியை தெரிவித்தது. எவ்வளவு நேரமாக சாப்பிடவில்லையோ அல்லது தாயை கானாத ஏக்கமோ , பழைய பனியனை விரித்து அதில் படுக்க வைத்ததும் சுருண்டு படுத்து கொண்டது . பொதுவாக எனக்கு தூக்கத்தில் இருக்கும் யாரையும் எழுப்புவது சுத்தமாக பிடிக்காது . ஆகையால் பூனை தூங்கி எழுந்த பின் அதற்கு சாப்பிட எதாவது கொடுக்கலாம் என்று நானும் சற்று கண்னயர்ந்தேன் .
சிறிது நேரத்தில் மெல்ல என் காலில் வந்து படுத்து கொண்டது . மியாவ் என்று கத்தாமல் “குவாக் குவாக் ” என்று கத்தியது . ஒரு வேளை மழை நேரமாதலால் தொண்டை கட்டிஇருக்கும் என்று நினைத்தேன். சிறிய தட்டில் பாலை வைத்தவுடன் ஒரே மூச்சில் காலி செய்தது . சிறிது தெம்பு வந்தவுடன் மெல்ல வீட்டை சுற்ற ஆரம்பித்தது . மதியம் சிறிது தயிரை சாப்பிட்டுவிட்டு வாசலில் கதவருகில் போய் படுத்துக் கொண்டே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.
அந்த நேரம் வீட்டுக்காரர் வர, அதற்கு சனி பெயர்ச்சி அப்போது தான் தொடங்கியது.

பூனையை பார்த்தும் அவர் கத்த தொடங்கி விட்டார் , பூனை வளர்க்க கூடாது என்றும் உடனே அதை வெளியே விடுமாறு கட்டளை இட்டார். நான் அலுவலத்திற்கு செல்பவன் என்னால் பூனை பராமரிப்பு முடியாது என்றும் மழை
விடும் நானே அதை எங்காவது உரிய இடத்தில் சேர்த்து விடுகிறேன் என்று எவ்வளவு கூறியும் சொனதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்.
நானும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலம் தாழ்தினேன் , வீட்டுக்கு அருகில் குடையை பிடித்து நின்று கொண்டு அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் என்னை குறை கூற ஆரம்பித்தார் . வழக்கம் போல் யாரும் வாயை திறக்க வில்லை .

வெறுத்து போய் பூனை குட்டியை ஒரு அட்டை பேட்டியில் வைத்து வீட்டுக்கு அருகில் உள்ள மூடிய கடை ஒன்றின் கதவருகில் வைத்து விட்டு வந்தேன் .
இரவு அதற்கு பால் வைக்க போக அட்டை பெட்டி நசுக்க பட்டு இருந்தது. பூனை குட்டியை அதற்கு பிறகு எங்கும் பார்க்கவில்லை .

பின் குறிப்பு : எங்கேயாவது காலை நக்கும் கருப்பு வெள்ளை பூனை குட்டியை கண்டீர்கள் என்றால் அதன் பசிக்கு சிறிதலவேணும் பாலை குடுக்கவும் .

Advertisements
பிரிவுகள்:கட்டுரைகள்

கடவுள் தண்டிப்பாரா?

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், “கடவுள் தண்டிப்பாரா?” என்று.”தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது” எனச் சொன்னோம்.உடனே அவர் கேட்டார், “அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?”அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்…குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக “வாடா” என்றான்.சப்தமாய் மலையிலிருந்து “வாடா” என்று குரல் எதிரொலித்தது.தன்னை, “யார் வாடா” என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, “யாரது?” என்றான்.”யாரது?” என்று மலையும் திரும்பக் கேட்டது.சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, “நீங்க யாரு?” என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.குரு சிரித்தபடியே சொன்னார்…”இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்,” என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.வாழ்வை எதிர்த்தாலே போதும், வாழ்வு அவரை எதிர்க்கும்.வாழ்வை வரவேற்றால்,அவரை….வாழ்வு வரவேற்கும்.எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.இனிமையாய் அணுகுங்கள்.இனிமையாய் எல்லாம் அமையும்.இது வாக்கல்ல,என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி : ஜீவன் முக்திபரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத

மொழிகள்(சுருக்கத் தொகுப்பு)
நன்றி :வெப்துனியா
பிரிவுகள்:கட்டுரைகள்

சங்கடகர சதுர்த்தி

இன்று சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபடுவோர்க்கு சங்கடங்கள் மறைந்து சந்தோஷங்கள் நிறைந்திடும் .
பிரிவுகள்:கட்டுரைகள்

புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!

புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!
“You offended my family and offended the shaolin temple” என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தியதும் திரையரங்குகிளில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.எண்டர் த டிராகன் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனைத் துரத்திக்கொண்டு புரூஸ் லீ துரத்திச் செல்ல, அவன் தனக்குப் பாதுகாப்பான கண்ணாடி அறைக்குள் புகுந்துவிட, மிக எச்சரிக்கையாக அவனை கண்டுபிடித்ததும், நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அவர் செய்த சண்டைக் காட்சியை பார்த்த எந்த ரசிகனும் மறந்திருக்க முடியாது.சென்னை ஆனந்த திரையரங்கில் எண்டர் த டிராகன் படம் வெளியிடப்பட்டபோது புரூஸ் லீ உயிரோடு இல்லை. 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்ற உண்மை அப்போது எந்த ரசிகருக்கும் தெரியாது.

ஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப்படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது.ஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் – தற்காப்புக் கலையில் கைதேர்ந்த – அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.ஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர். போட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது திரையரங்கில் மயான அமைதி நிலவியது.

வில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள். அதுவரை திரைப்பட ரசிகர்கள் பார்த்திராதவை. அவர் பாம்பு ஒன்றைப் பிடித்து பைக்குள் அடக்கிக்கொள்வதும், தனக்கு ஒத்தாசையாக அதனைப் பயன்படுத்துவதும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தின.
இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.பிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது. பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தனர். 30 தடவைப் பார்த்தேன், 40 தடவைப் பார்த்தேன் என்று பெருமையாக செல்லிக்கொள்ளும் ரசிகர்கள் ஏராளம்.இந்திய ரசிகர்கள் நெஞ்சில் புரூஸ் லீயின் வடிவமும், அவர் சண்டையிட்ட விதமும் மறையாமல் இன்றும் வாழ்கிறது.இப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக் கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது. தற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ!

நன்றி : வெப்துனியா
பிரிவுகள்:கட்டுரைகள்

விடுகதை – தொடர் -10

செப்ரெம்பர் 24, 2009 பின்னூட்டமொன்றை இடுக

நாம் சொல்வதையும் செய்வதையும் மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று நாம் நினைப்பது போல் , மற்றவர்கள் பேசுவதையும் ,செயல்களையும் நாம் கவனிக்க வேண்டும் . நடந்த தவறுகளை சரி செய்ய வேண்டுமே தவிர அவற்றை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்க கூடாது . வீண் விவாதங்கள் எப்போதும் நன்மை பயக்காது. எப்போதும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நம்மை சிறப்படைய செய்யும் . பாராட்டுக்கள் ஒருவரின் குறையை பாதியாக போக்கி விடும்.

பிரிவுகள்:கட்டுரைகள்

விடுகதை – தொடர் -9

செப்ரெம்பர் 23, 2009 பின்னூட்டமொன்றை இடுக

இரவின் குளிர் சந்திரன் பகலில் சூரியனாக மாறி சுட்டு எரிப்பதாக நினைப்பது நம் மடமையே. காற்று அடித்துக்கொண்டே இருப்பதினால் மலையை கரைத்துவிட முடியுமா அதுபோல் பிரச்சினைகள் நம்மை சரித்து விடாது மாறாக நம்மை நமக்கு உணர்த்தும் . மற்றவர் மேல் குற்றம் சொல்வதை விட நம்மை சரி சரி செய்து கொள்ள வேண்டும். எதிபார்ப்புகள் ஏற்பட ஏற்பட விரிசல்கள் தான் உண்டாகும் அன்றி இணக்கம் ஏற்படாது . விட்டு கொடுத்தால் கெட்டுப் போவார் யாருமில்லை அல்லவா .
பிரிவுகள்:கட்டுரைகள்

விடுகதை – தொடர் -8

செப்ரெம்பர் 21, 2009 பின்னூட்டமொன்றை இடுக

உளியை தாங்கும் கல் தான் சிற்பமாகிறது , புடம் போட்ட தங்கம் தான் அதற்கு பெருமை அளிக்கிறது அதை போல பிரச்சினைகள் நம்மை நமக்கு உணர்த்த வருகின்றன . நமது முயற்சியின் அளவை எப்போதும் அளவிட கூடாது . பாறையை சிற்பமாக மாற்றும் உளியை விட அந்த சிற்பத்துக்கு தான் பெருமை கிடைக்கிறது. அதேபோல எல்லா பாறைகளும் சிற்பமாக போவதில்லை. உளியின் சக்தியை தாங்கி நிற்கபடுபவை தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றன அதுபோல் பிரச்சினைகளை தாங்கி அதை தாண்டி வருபவர் சிறந்தவராகின்றனர் .
பிரிவுகள்:கட்டுரைகள்