தொகுப்பு

Archive for the ‘ஆங்கில சினிமா’ Category

மூன்

திசெம்பர் 1, 2009 2 பின்னூட்டங்கள்


கதை சொல்லும் நீதி : நிலாவில நீ இருந்தாலும் உனக்கு சனி பிடிக்கலாம் .

“சாரங் ” என்னும் நிறுவனம் நிலவில் தனது ஆராய்ச்சி கூடத்தை நிறுவி சில வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறது . அந்த ஆராய்ச்சி மையத்தில் சாம் மட்டுமே தனி ஆளாக வேலை செய்து வருகிறான் . அவனுக்கு துணையாக கெர்ட்டி என்னும் ரோபோ இருந்து வருகிறது.

சாமின் மனைவி டெஸ் மற்றும் அவர்கள் குழந்தையும் சாமுக்கு அனுப்பும் வீடியோ செய்திகள் ஓரளவு அவனுக்கு தனிமையை தவிர்த்தாலும் , பூமிக்கு செல்லும் நினைவை மேலோங்க செய்கிறது . பூமியில் இறக்கும் தனது மேல் அதிகாரிகளுடன் கொண்டு தனது விருப்பதை சொல்ல ,அவர்கள் அவனது மூன்று வருட ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் முடிய போகிறது என்றும் வெகு சீக்கிரமே அவன் பூமிக்கு திரும்பலாம் என்றும் கூறுகின்றனர் .

ஆராய்ச்சி மையத்தின் வெளியே ஒரு தானியங்கி மண் ஆராய்ச்சி வண்டி பழுதாகிறது . அதை சரி செய்ய கிளம்பும் சாம் அங்கே விபத்தில் மாட்டி சுய நினைவை இழக்கிறான் . திரும்ப கண் விழிக்கும் சாம் தான் ஆராய்ச்சி மையத்தில் கெர்ட்டி யின் அருகில் இருப்பதாய் நினைத்து நிம்மதி அடைகிறான் .
அப்போது அவனை போலவே இன்னொருவனும் வர அவனும் தன்னை சாம் என்று கூறிகொள்கிறான் . சாம் குழப்பமடைந்து கெர்ட்டியிடம் அது எதுவும் சொல்ல மறுக்கிறது .

அடுத்து நடக்கும் சில நிகழ்வுகள் இரு சாம்களையும் ஒரே கோட்டில் பயணிக்க வைக்கிறது . அது அவர்கள் எப்படி அந்த ஆராய்ச்சி மையத்திற்கு வந்தார்கள் , ஏன் தன் மனையிடம் நேரலையில் பேச முடிவதில்லை , எதற்காக எந்த பிரச்சினையும் இல்லாத போது ஒரு ரெஸ்க்யு டீம் இங்கே வர வேண்டும் என்பன .
இருவரும் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியேறி இரு வண்டிகளில் இருவேறு திசைகளில் பயணம் செய்கின்றனர் .

இருவரும் ஒரே காட்சியை காண்கின்றனர், அது அந்த ஆராய்ச்சி மையத்திற்கு எந்த சிக்னலையும் கிடைக்க விடாத ஜாம்மர் . அதற்குள் சாமுக்கு உடல்நிலை மோசமாக இரண்டாவது சாமிடம் சொல்லி விட்டு திரும்ப ஆராய்ச்சி மையத்திற்கு வருகிறான் . அப்போது தற்செயலாக ஆராய்ச்சி மையத்தின் நிலவரை ஒன்றை கண்டு பிடிக்கிறான் . அதற்குள் இரண்டாவது சாமும் அங்கே வந்துவிட இருவரும் அந்த அறையில் இறங்கி பார்க்க இருவரும் திடுகின்றனர் .

ஏனனினில் அங்கே சாமை போல உருவமுள்ள பலர் பெட்டிகளில் வைக்க பட்டுள்ளனர் . இருவருக்கும் அப்போது தான் தங்கள் பூமியில் உள்ள சாமின் க்ளோனிங் என்பது தெரிகிறது . ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஒரு புது சாம் உயிர்பிக்கபட்டு ஏற்கனவே பதிவு செய்த வீடியோ செய்திகள் மூலம் அவர்கள் ஏமாற்ற பட்டு , பூமிக்கு திரும்பும் நாள் என்று சொல்லி மீண்டும் பெட்டியில் அடைக்கபடுகின்றனர்.


முதல் சாமின் உடல் நிலை மேலும் மோசமாகிறது . இரண்டாவது சாம் அங்கிருந்து தப்பிக்க வழி தேடுகிறான் . இதற்கிடையே கெர்ட்டி அவர்களுக்கு உதவ முன் வருகிறது .

முதல் சாம் உயிர் பிழைத்தானா , இரண்டாவது சாம் பூமிக்கு தப்பித்தானா ரெஸ்க்யு டீமிடம் மாட்டி கொண்டானா என்பன திரையில் ……

குறிப்பு : படத்தில் சாமின் நடிப்பு அற்புதம் ஏனனில் அவர் ஒருவர் மட்டுமே படத்தில் நடித்திருக்கிறார் . அவர் மனைவி, குழந்தை மற்றும் மேலதிகாரிகள் வரும் காட்சி யாவும் வீடியோ மட்டுமே . ஒரே ஒரு காட்சி மட்டும் அவர் மனைவியுடன் தோன்றுவார்.

Advertisements
பிரிவுகள்:ஆங்கில சினிமா

ஜெனிபெர்ஸ் பாடி


கதை சொல்லும் நீதி : உற்ற நண்பராய் இருந்தாலும், வருங்கால துணையை ஒன் ஸ்டெப் பேக்கில் வைக்கவும் .

மேகன் பாக்ஸ் , அமன்டா ஸெய்ப்ரிட் இருவரும் சிறுவயது முதல் நெருங்கிய தோழிகள். அமன்டா ஸெய்ப்ரிட் தன்னுடன் படிக்கும் ஜ்ஹோன்னி சிம்மொன்ஸ் உடன் லவ்வி கொண்டிருக்க மேகன் பாக்ஸ் தன்னுடன் படிக்கும் மாணவர்களை அலைய விட்டு கொண்டிருக்கிறாள் .

ஒரு நாள் இருவரும் ஒரு மதுபான விடுதிக்கு செல்ல அங்கே லோ ஷோல்டேர்ஸ் என்னும் இசை குழு அற்புத இசையில் வந்திருப்பவர்களை மன மயக்க செய்கின்றனர். திடீரென்று ஏற்படும் தீ விபத்தில் சிலர் இறந்து விட பலர் காயமும் அடைகின்றனர் . அமன்டா எவ்ளவோ தடுத்தும் மேகன் லோ ஷோல்டேர்ஸ் இசை குழுவினரோடு பயணம் செய்கிறாள் . இசை குழுவினரின் பயண அந்த ஊரின் காட்டு பகுதியில் உள்ள ஒரு அருவி கரையில் முடிகிறது. அந்த அருவி கரையில் ஆழம் கண்டரியபடாத சுழல் ஒன்றின் அருகில் மேகன் கை கால் கட்டப்பட்டு கத்தியால் சரமாரியாக குத்தபடுகிறாள் . வந்தவர்கள் அந்த சூழலில் உள்ள கெட்ட ஆவிக்கு அவளை பலி கொடுத்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து செல்கின்றனர் .

அந்த இரவில் அமன்டா தனது காதலனுக்கு போன் செய்து மேகன் இசைக்குழுவினரோடு சென்றது சரியல்ல அவளுக்கு எதாவது நேர்ந்து விட போகிறது என்று பயபடுகிறாள் . அதே நேரத்தில் வாசலை யாரோ தட்டுவது போல் இருக்க அங்கே எவரும் இல்லாதது கண்டு அதிர்ச்சி மாறாமல் போன் கட் செய்து வீட்டுக்குள் செல்கிறாள்.


உள்ளே அவள் கண்ட காட்சி அவளின் மொத்த உடம்பையும் சில்லிட செய்கிறது. முழுவதும் ரத்தத்தால் நனைந்த உடம்புடன் மேகன் அவளையே பார்த்து கொண்டிருகிறாள் . மேகன் சிறிது நேரத்தில் வெளியேற வீட்டில் உள்ள ரத்த கறைகளை விடிய விடிய துடைத்து எடுகிறாள் அமன்டா. அடுத்த நாள் கல்லூரியில் எதுவுமே நடக்காதது போல் வருகிறாள் மேகன் . முந்தய இரவை பற்றி அமன்டா சொல்ல தன் அவளின் வீட்டுக்கு வரவில்லை என் சாதிக்கிறாள் மேகன் .

தன்னுடன் படிக்கும் மாணவனை பள்ளி அருகில் இருக்கும் காட்டு பகுதியில் வைத்து கொடூரமாக கொன்று அவன் ரத்தத்தை குடிக்கிறாள் மேகன் . மேலும் அவளின் ரத்த வெறிக்கு அவளுடன் படிக்கும் சில மாணவர்கள் பலியாகின்றனர்.

இது எல்லாம் தெரிந்த அமேன்டவினால் மேகனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலை , இருந்தாலும் நூலகத்தில் மேகன் பிடித்திருக்கும் ஆவியை பற்றி தெரிந்து கொள்கிறாள் . ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதை போல அவனை கடித்து இவனை கடித்து கடைசியில் அமேன்டாவின் காதலனின் மேல் குறி வைக்கிறாள் மேகன் . அவனை காப்பாற்று வதற்குள் அவன் உயிர் பிரிய இப்போது மேகனை முடிக்கவேண்டிய கட்டாயம் அமேண்டவிற்கு .


கையில் கத்தியுடன் மேகன் வீட்டுக்குள் பாயும் அமன்டா கொலை வெறியில் பாய இருவருக்கும் இடையே நடக்கும் கைகலப்பு கடைசியில் அவளின் இதயத்தில் அமன்டா கத்தியை பாய்ச்ச மேகன் உயிர் பிரிகிறது . அமன்டா மனநல மருத்துவமனையில் அடைக்க படுகிறாள் . மேகனுடன் நடந்த போராட்டத்தில் அவளின் இடது தோளில் ஏற்பட்ட காயம் அவளை பாதி மனிதன் பாதி மிருகமாகவும் மாற்றி விடுகிறது . சிறையில் இருந்து தப்பிக்கும் அமன்டா நேராக லோ ஷோல்டேர்ஸ் இருப்பிடம் சென்று அவர்கள் அனைவரையும் தீர்த்து கட்டுகிறாள் .

பிரிவுகள்:ஆங்கில சினிமா

Vacancy


கதை சொல்லும் நீதி : மாமியார் வீட்டுக்கு போகும் போது வழியில தங்காதே

கதை:
வரும் சில நாட்களில் மனம் ஒத்து (!) பிரிந்து செல்லபோகும் பாக்ஸ் தம்பதிகள் கடைசி நிகழ்ச்சியாக mrs.பாக்ஸ் இன் அம்மா கொடுக்கும் பார்ட்டி ஒன்றுக்கு செல்கிறார்கள். கையில் வரைபடத்துடன் மனைவியும் ,தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டி கொண்டு இருக்கும் கணவனும் ஒருவர் மாற்றி ஒருவர் குறை சொல்லிக்கொண்டு அந்த நீண்ட நெடுச்சலையில் தனியாக தங்கள் காரில் பயணிக்கின்றனர். திடீரென்று கார் மக்கர் செய்ய காரை அங்கே விட்டு விட்டு இரண்டு மைல் துரம் நடந்து பைன் வூட்ஸ் என்ற விடுதிக்கு வருகின்றனர். வெறும் நான்கே அறைகள் கொண்ட அந்த விடுதியின் காப்பாளர் கார் சரியாக காலை ஆகும் என்றும் அதுவரை அறை என் நான்கில் தங்குமாறு சொல்கிறான். பாக்ஸ் தம்பதிகளுக்கு வேறு வழி இல்லாததால் அங்கேயே இரவை போக்க முடிவு செய்கின்றனர் .

அவர்களின் தனிமையை போக்க அந்த அறையில் ஒரு தொலைக்காட்சி பெட்டியும் சில வீடியோ டேப் களும் இருக்கின்றன. வீடியோ டேப் பை பார்த்த பாக்ஸ் தம்பதிகள் அதிர்ச்சி அடைகின்றனர் . அந்த வீடியோ அதே ரூமில் தங்கிய அனைவரும் எப்படி கொல்லபடுகிறார்கள் என்பதை காட்டுகிறது . அந்த விடுதி காப்பாளரும் அவருக்கு உதவியாக இருவரும் சேர்ந்து அங்கு வந்து தங்குபவர்களுக்கு பயத்தை கொடுத்து அவர்களை கொலை செய்து அதை லைவ் ஆக படம் பிடித்து விற்கின்றனர்.
அவர்களிடமிருந்து தபிக்க இருக்கும் ஒரே டெலிபோன் பூத்தில் 911 கு டயல் செய்தால் எதிர்முனையில் அந்த விடுதி காப்பாளர் பேசுகிறான் .

இனி இங்கிருந்து தப்பிப்பது கடினம் என்று மீண்டும் அறைக்கு திரும்பி பூட்டி கொள்கின்றனர் . பாக்ஸ் தம்பதிகள் மீண்டும் மீண்டும் அந்த வீடியோ பார்க்கும் போது அவர்கள் எப்படி பூட்டிய அறைக்குள் வருகின்றனர் என்பதை கண்டு பிடித்து அதே வழியாக அவர்கள் வெளியேற அந்த வழி அவர்களின் கண்காணிப்பு அறைக்கு செல்ல அங்கே இருக்கும் போன் முலம் போலீஸ் சை வர செய்ய வந்த ஒரு போலீஸ் காரரும் அவர்களுக்கு இரையாகிறார். விஷயம் பெரிசாக இனிமேல் பாக்ஸ் தம்பதிகளை விட குடாது என்று அவர்களை நேரடியாக தாக்குவதற்கு முவரும் முயல , தன் மனைவியை விடுதி அறையின் மேல் பகுதிக்குள் அனுப்பி விடுகிறான். பின் ,கதவினை திறந்து தப்பிக்க முயல வாசலிலேயே கத்தியால் குத்தப் படுகிறான் .

mrs. பாக்ஸ் முழு இரவையும் கழித்த பின் மெல்ல கிழே இறங்கி வரும் பாக்ஸ் கணவனை நோக்கி வருகிறாள் . அவள் பின்னால் கொலைகாரனும் வருகிறான் ….

பாக்ஸ் தப்பி வந்தாளா அவள் கணவன் என்ன ஆனான் , தொடர் கொலைகாரர்களின் கதை என்ன போன்றவை படம் முடிவில் …….

பிரிவுகள்:ஆங்கில சினிமா