தொகுப்பு

Archive for திசெம்பர், 2009

பொன்மனச் செம்மல்


எனக்கு எம்ஜியர பிடிக்கும் நான் சொன்னப்ப என் கல்லூரி நண்பர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள். ஏனனில் அப்போது ரஜினி கமல் அடுத்து அஜித் விஜய் என ரசனைகள் மாறி கொண்டிருந்தது . அப்போதும் நான் விடா பிடியாக எம்ஜியார் விசிறியாக இருந்தேன் . அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது . இப்போது பல நடிகர்கள் புதிதாக வந்து விட்டாலும் எனக்கு எம்ஜியார் அளவிற்கு யாரையும் ரசிக்க வில்லை . சரி அந்த அளவுக்கு அவர பிடிக்க என்ன காரணம் . இல்லாம இருக்குமா …..

நான் தேர்ட் ஸ்டாண்டர்ட் (அதுவரை தான் இங்கிலீஷ் மீடியம் ஹிஹி ) படுச்சுகிட்டு இருந்தேன் . என்னைக்குமே ஸ்கூல் பக்கம் வராத சித்தப்பா அன்னைக்கு வந்து மிஸ்ஸு கிட்ட எதோ பேசி விட்டுச் என்னை வீட்டுக்கு கூட்டி வந்துட்டார். வீட்டுக்கு வந்து பாத்தா தாத்தா மேல மாலை எல்லாம் போட்டு படுக்க வச்சுருந்தாக . எல்லோரும் அழுதுகிட்டே இருந்தாங்க , நான் அழுதே பார்க்காத என அப்பாவும் விமி விமி அலுத்து கிட்டே இருந்தார். அத பாத்தா எனக்கும் அழுகை அழுகையா வந்துருச்சு . எவ்ளோ நேரம் தான் அழுகுறது வெளியே வந்து பக்கத்துக்கு வீடு பசங்களோடு தெருவுல விளையாட போய்டேன் .

சாயங்காலம் ஆன உடன் தாத்தாவ பூ போட்ட வண்டில வச்சு தள்ளிகிட்டே போனாங்க நான் ரெம்ப அடம் பிடுச்சு அப்பாவோட போனேன் . ஏன்டா போனோம்னு ஆயிருச்சு அவ்ளோ தூரம் என்னால நடக்க முடியல, அப்பா அழுதுகிட்டே என்ன தூக்கிகிட்டும் போனாரு . ஒரு வழியா ஆத்து பக்கத்தில உள்ள இடத்துக்கு போய் சேர்ந்தோம் . அங்கே பெரியப்பா தாத்தாவ சுத்தி வந்து
அவர் மேல நெருப்பு வச்சுட்டார். தாத்தா எந்திரிக்கவே இல்ல ஒரு வேளை அவருக்கு சுடலேன்னு நான் நெனச்சேன் . அப்றம் நான் வீட்டுக்கு வந்துட்டேன் .
கொஞ்ச நாள் தாத்தா நினைப்பு வரும் அப்புறம் போய்ரும் .

அப்டித்தான் அன்னைக்கு நான் விளையாடி கிட்டு இருந்தப்ப பக்கத்துக்கு வீட்டு ஜெசிம்மா எம்ஜியார் வர போறாரு பார்க்கலாம் வான்னு கூட்டி போச்சு. ஒரே கூட்டம் ரோடுல ஒரு வண்டி கூட இல்ல ரோடு பளுசுன்னு எப்டி வீட்டு பாடம் எழுதுறப்ப முந்தா நாள் பாடத்த சிலேட்டில சுத்தமா அழுசிருவோமோ அது போல இருந்துச்சு .

கொஞ்ச நேரம் அப்டியே எல்லாரும் நின்னுகிட்டே இருந்தோம் . திடீர்னு ஒரு வண்டி போச்சு . உடன் எல்லோரும் எம்ஜியாரு வரபோறாரு எம்ஜியாரு வரபோறாரு பேசிகிட்டாங்க . வருசியா வண்டி வர வர எந்த வண்டில எம்ஜியார் வருவார்னு யோசிச்சிகிட்டே முன்னாடி நடக்க , ஒரு வண்டில தங்கம் மாதிரி ஒருத்தரு கருப்பு கண்ணாடி போட்டு வெள்ளை தொப்பி போட்டுகிட்டு வராரு .
கை தானா கும்பிட ஆரம்பிச்சுருச்சு , அது வரை கை ஆட்டி கொண்டே வந்தவரு என்னை பார்த்த உடன அவரும் தலைய வெளிய நீட்டி கும்பிட்டாறு . எனக்கு பயங்கர சந்தோசம் கார் பிண்டி ஓட முயற்சி பண்ணப்ப காக்கி சட்ட போட்ட ஒருத்தரு என் தோள பிடுசுகிட்டாறு . கார் மறையிற வரைக்கும் என்ன விடல . அப்பறோம் சிருச்சிகிடே விட்டாரு . ஜெஸிமா இத எங்க வீட்ல சொல்லவும் யாரும் நம்பல அப்புறம் எங்க வீட்டு பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் நடந்தத சொல்லவும் . எங்க அப்பாவுக்கு தனி சந்தோசம் (அது ஏன்னு பிண்ணாடி சொல்றேன்). அன்னைக்கு கனவுல எம்ஜியார் வந்து கிட்டே இருந்தார் . அப்பறம் அவரை எம்ஜியார் தாத்தா அப்டித்தான் கூப்டுவேன். ஆன அவருக்கு வயச கூட்டி பார்த்த பிடிக்காதுனு கேள்விப்பட்ட உடன் அவரை தலைவர்னு கூப்பிட ஆரம்பிச்சேன் .

அப்புறம் அவர் படமா பார்க்க ஆரம்பிச்சேன் . இப்ப வரைக்கும் நான் அவர் ரசிகன் தான் . அவர் நினவு நாள் வந்துச்சுன்னு சொன்னாங்க , அப்பறம் பிறந்த நாள் வரும்னு சொல்வாங்க . அந்த நாட்கள் எல்லாமே அவரால் ஆதாயம் பெற்றவங்களோட நாளா போச்சு .

பார்த்தது ஒரு தடவ தான் ஆன ஒரு சின்ன பையன் கும்பிடுறான் நாம ஏன் கும்பிடனும்னு அவர் நினைக்கல . என்னை பொறுத்த வரை எல்லா நாளும் அவர் நினைவு நீங்காத நாட்கள் தான் . எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இன்னும் என்னை போல் பலரின் நினைவுகளாய் வாழும் அவர் உண்மையில் பொன்மனச்செம்மல் தான் …..

Advertisements
பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

இளைய தலைமுறை – 1


பெயர் : ஸ்வேதா ரவிசங்கர்

பிறந்த தேதி : 11/10/1986

படிப்பு :B.Tech

இருப்பிடம் : முன்பு மும்பை தற்போது சென்னை

பிடிச்சது : பரத நாட்டியம்

முதல் அரேங்கேற்றம் : ஜனவரி 2001

நாட்டிய அனுபவம் : 16 வருடம்

மேலும் விவரங்களுக்கு :
வெப்சைட் : http://www.swetaravisankar.com/

குறிப்பு : அம்மணி பெரிய ஆளா வருவதற்கு மிக பெரிய வாய்ப்புகள் இருக்கு சபாகாரங்க இப்பவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து கொள்ளவும் .

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

கொலுசு


அவள் நடந்து செல்லும் போதும்
அவள் ஓடி வரும் போதும்
ஏனோ தெரியவில்லை
அவள் கொலுசு மட்டும் காலை ஒட்டி கொண்டே இருக்கிறது ….

என் மனதைப்போல ….

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

பிரிவு

எப்போதும் என் கண்கள்
கனவுகளாலும்
கண்ணீராலும்
நிறைந்து கொண்டே இருக்கின்றன

பிரிந்து போன அவளின்
வருகைக்காக ……

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

அப்பா – உரைநடை கவிதை


ஆசையாய் பெயரிட்டு
மெல்ல நடை பழக வைத்து
சிந்திய சோற்று பருக்கைகளை
சிரித்தவாறு சாப்பிட்டு
“கக்கா” வை மிதிக்காதே என்று
அதை கையினால் எடுத்ததும்

பல முறை தூக்கத்தை
கெடுத்துக் கொண்டு
நெஞ்சின் மேல் தாலாட்டியதையும்
பள்ளியில் சேர்பதற்கு
பல மணி நேரம்
வரிசையில் நின்றதும்

மானத்தை விற்று
கடன் வாங்கி
இரு சக்கர வாகனம்
வாங்கி கொடுத்தும்
தினமும் துடைத்து அதற்கு
பெட்ரோல் வாங்க காசு கொடுத்ததும்

இருந்த நிலத்தை விற்று
கல்லூரிக்கு அனுப்பியதும்
கண் பார்வை மங்கிய பின்னும்
அதிகாலை எழுந்து
பால் வாங்கி வந்ததும்
இல்லாத பரிச்சைக்கு பணம் கொடுத்ததும்

வேலைக்கு சேர்வதற்கு
வீட்டை வித்து பணம் கொடுத்ததும்
தலைக்கு மேல் கடனை வாங்கி
கல்யாணம் செய்து வைத்ததும்
சம்பளம் இல்லா வேலைக்காரனாய்
அனு தினமும் உழைத்ததும்

கொஞ்சம் கூட நினைவில் இல்லை
உன்னை முதியோர் இல்லத்தில்
ஓர் அகதியாய் விட்டு விட்டு
வந்த பின்னும் ….

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

கணிணியின் ஹார்டிஸ்க்ஐ பராமரிக்க


அனேகமாக நாம் கணிணியில் பயன்படுத்தும் ஹார்டிஸ்கில் தொன்னுத்தி ஐந்து
சதவிதம் சீகேட் ப்ராடைக்ட் ஆகா தான் இருக்கும். எப்படி ப்ரோசெசர்களில் இன்டெல் முதன்மையான இடத்தில் உள்ளதோ அதுபோல சீகேட் ஹார்டிஸ்க் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது
(அடுத்த இடத்தில் வெஸ்டேர்ன் டிஜிட்டல் ).

அப்படிப்பட்ட சீகேட் ஹார்டிஸ்க் களை பராமரிக்க சீடூல்ஸ் என்ற மென்பொருளை இலவசமாக தருகிறது. நமது தகவலை பத்திரமாக பாதுகாக்கும் ஹார்டிஸ்க் களை பாதுகாக்க இதனை நம் கணினிகளில் நிறுவி கொள்ளலாம் .

டவுன்லோட் செய்திட :

http://www.seagate.com/staticfiles/support/seatools/SeaToolsforWindowsSetup-1201.exe

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

மாமன் மகன்

அந்தி சாஞ்ச வேலையில
ஒத்தையடி பாதையிலே
நாம மட்டும் போகையில
என் கையை பிடுச்சுகிட்ட
மனச நீயும் வாங்கிகிட்ட

அப்பன் ஆத்தா பெருசில்ல
உடன் பிறந்தது தேவையில்ல
சொந்த பந்தம் பாக்கவில்லை
ஊர் நடப்பு உலக நடப்பு
நீ நடந்த நடையில நான் மறக்க

வெட்டி பயலா நீ இருந்த
அதையே குறையாய் ஊர் சொல்ல
கண்ணீர் துளிகளை நான் தொடுக்க
பணத்த நீ சம்பாதிக்க
பட்டிணதுக்கு புறப்பட்ட

பாதி உசுரா நான் இங்க
பதிலேதும் வரவில்ல
பாதி சாமிக்கு நேந்துகிட்டேன்
மீதி சாமிக்கு விரதமிருந்தேன்
உன் நெனப்பே உசுரச்சு


தங்கமேதும் வேணா சாமி
தங்க குடுசை போதும்
பட்டு சேல எதுவும் வேணா
உன் பாதம் தான் என் உலகம்
வெரசா வந்து விடு என் ராசா

நாலு பொங்கல பாத்துபுட்டேன்
எந்த பானையும் பொங்கவில்ல
பொங்கி போன கண்ணுக்கு
கசங்கிய இந்த போட்டா தானே
என்னைக்கும் கட்டு கரும்பு

அடுச்சு பிடுச்சு ஓடி வந்த
பக்கத்து வீட்டு பாசம் ஒன்னு
சொல்லி விட்டு போச்சு
நீ வந்து ரெண்டு நாலு ஆச்சு
காலு ரெண்டும் தரயில்யில்லை

கண்ணும் ரெண்டும் தேடி போச்சு
தெரு தெருவா காலு போச்சு
ஆஞ்சு ஓஞ்சு அலைஞ்சு திரிஞ்சு
வீட்டுக்கு நான் வந்து நின்னா
கூடத்தில நீ நிக்க

அப்பன் ஆத்தாள மதிச்சிபுட்ட
என் மனசுல உசந்துபுட்ட
சுத்தி இருந்த எல்லோரும்
போட்டாங்க உனக்கு புகழ் மாலை
எல்லாத்துக்கும் நீ சிரிச்சிகிட்ட

மனசு இப்போ காத்தாச்சு
பொங்கிய கண்ணு பூத்தாச்சு
தைக்கு வேளை வந்தாச்சு
கண்ண மூடி கண்ண திறக்க
தாலி கழுத்தில ஏறியாச்சு

முதலிரவு நேரத்தில
உன் கால நான் தொட
என் கைய பிடிச்சுகிட்ட
காலம் உள்ள வரைக்கும்
நீ விட்டு விட மாட்டேன்னு

சொல்லாம சொல்லுச்சு
நீ தொடுத்த கண்ணீர் துளி ……..

அப்பறமா என்னாச்சு
ரெண்டு மூணாச்சு
நமக்கு இப்போ ஒண்ணாச்சு
இப்பவும் நீ கை பிடிச்சா
பழைய நினைப்பு போய் வருது …..

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது