தொகுப்பு

Archive for நவம்பர், 2009

ஜெனிபெர்ஸ் பாடி


கதை சொல்லும் நீதி : உற்ற நண்பராய் இருந்தாலும், வருங்கால துணையை ஒன் ஸ்டெப் பேக்கில் வைக்கவும் .

மேகன் பாக்ஸ் , அமன்டா ஸெய்ப்ரிட் இருவரும் சிறுவயது முதல் நெருங்கிய தோழிகள். அமன்டா ஸெய்ப்ரிட் தன்னுடன் படிக்கும் ஜ்ஹோன்னி சிம்மொன்ஸ் உடன் லவ்வி கொண்டிருக்க மேகன் பாக்ஸ் தன்னுடன் படிக்கும் மாணவர்களை அலைய விட்டு கொண்டிருக்கிறாள் .

ஒரு நாள் இருவரும் ஒரு மதுபான விடுதிக்கு செல்ல அங்கே லோ ஷோல்டேர்ஸ் என்னும் இசை குழு அற்புத இசையில் வந்திருப்பவர்களை மன மயக்க செய்கின்றனர். திடீரென்று ஏற்படும் தீ விபத்தில் சிலர் இறந்து விட பலர் காயமும் அடைகின்றனர் . அமன்டா எவ்ளவோ தடுத்தும் மேகன் லோ ஷோல்டேர்ஸ் இசை குழுவினரோடு பயணம் செய்கிறாள் . இசை குழுவினரின் பயண அந்த ஊரின் காட்டு பகுதியில் உள்ள ஒரு அருவி கரையில் முடிகிறது. அந்த அருவி கரையில் ஆழம் கண்டரியபடாத சுழல் ஒன்றின் அருகில் மேகன் கை கால் கட்டப்பட்டு கத்தியால் சரமாரியாக குத்தபடுகிறாள் . வந்தவர்கள் அந்த சூழலில் உள்ள கெட்ட ஆவிக்கு அவளை பலி கொடுத்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து செல்கின்றனர் .

அந்த இரவில் அமன்டா தனது காதலனுக்கு போன் செய்து மேகன் இசைக்குழுவினரோடு சென்றது சரியல்ல அவளுக்கு எதாவது நேர்ந்து விட போகிறது என்று பயபடுகிறாள் . அதே நேரத்தில் வாசலை யாரோ தட்டுவது போல் இருக்க அங்கே எவரும் இல்லாதது கண்டு அதிர்ச்சி மாறாமல் போன் கட் செய்து வீட்டுக்குள் செல்கிறாள்.


உள்ளே அவள் கண்ட காட்சி அவளின் மொத்த உடம்பையும் சில்லிட செய்கிறது. முழுவதும் ரத்தத்தால் நனைந்த உடம்புடன் மேகன் அவளையே பார்த்து கொண்டிருகிறாள் . மேகன் சிறிது நேரத்தில் வெளியேற வீட்டில் உள்ள ரத்த கறைகளை விடிய விடிய துடைத்து எடுகிறாள் அமன்டா. அடுத்த நாள் கல்லூரியில் எதுவுமே நடக்காதது போல் வருகிறாள் மேகன் . முந்தய இரவை பற்றி அமன்டா சொல்ல தன் அவளின் வீட்டுக்கு வரவில்லை என் சாதிக்கிறாள் மேகன் .

தன்னுடன் படிக்கும் மாணவனை பள்ளி அருகில் இருக்கும் காட்டு பகுதியில் வைத்து கொடூரமாக கொன்று அவன் ரத்தத்தை குடிக்கிறாள் மேகன் . மேலும் அவளின் ரத்த வெறிக்கு அவளுடன் படிக்கும் சில மாணவர்கள் பலியாகின்றனர்.

இது எல்லாம் தெரிந்த அமேன்டவினால் மேகனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலை , இருந்தாலும் நூலகத்தில் மேகன் பிடித்திருக்கும் ஆவியை பற்றி தெரிந்து கொள்கிறாள் . ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதை போல அவனை கடித்து இவனை கடித்து கடைசியில் அமேன்டாவின் காதலனின் மேல் குறி வைக்கிறாள் மேகன் . அவனை காப்பாற்று வதற்குள் அவன் உயிர் பிரிய இப்போது மேகனை முடிக்கவேண்டிய கட்டாயம் அமேண்டவிற்கு .


கையில் கத்தியுடன் மேகன் வீட்டுக்குள் பாயும் அமன்டா கொலை வெறியில் பாய இருவருக்கும் இடையே நடக்கும் கைகலப்பு கடைசியில் அவளின் இதயத்தில் அமன்டா கத்தியை பாய்ச்ச மேகன் உயிர் பிரிகிறது . அமன்டா மனநல மருத்துவமனையில் அடைக்க படுகிறாள் . மேகனுடன் நடந்த போராட்டத்தில் அவளின் இடது தோளில் ஏற்பட்ட காயம் அவளை பாதி மனிதன் பாதி மிருகமாகவும் மாற்றி விடுகிறது . சிறையில் இருந்து தப்பிக்கும் அமன்டா நேராக லோ ஷோல்டேர்ஸ் இருப்பிடம் சென்று அவர்கள் அனைவரையும் தீர்த்து கட்டுகிறாள் .

Advertisements
பிரிவுகள்:ஆங்கில சினிமா

விண்டோஸ் 7 -இன் வகைகள் பயனாளர்களின் பயன் பாட்டிற்கு ஏற்ப


உங்கள் கணிணியில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யும் முன் உங்கள் பயன் பாட்டிற்கு ஏற்ற வகையை தேர்வு செய்து கொள்ளவும் .

பிரிவுகள்:தொழில்நுட்பம்

கணிணி விரைவாக இயங்கிட

உங்கள் கணிணி விரைவாக இயங்கிட ஓர் இலவச மென்பொருள் இந்த பெர்பெக்ட் utilities ஆகும் . இது ஒரு இலவச தொகுப்பாக கிடைக்கிறது.system cleaners, system optimizers, system control, system tools, Registry tools என பலதரப் பட்ட வேலைகளை இது ஒன்றே செய்கிறது . இதை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் .

டவுன்லோட் செய்திட :

http://dl.filekicker.com/send/file/227669-LWGI/puinstall303-en-p.exe

பிரிவுகள்:தொழில்நுட்பம்

நூறாவது பதிவு

நவம்பர் 25, 2009 1 மறுமொழி


அட நம்ம வந்து அதுக்குள்ள நூறாவது பதிவா என எனக்கு ஆச்சர்யம் வந்தாலும் நான் தேர்ந்தெடுத்த பதிவர்களின் வழியே நான் வந்ததால் அதற்குள் அடைந்து விட்டேன். இந்த நூறாவது பதிவின் மூலம் நான் புதிதாக எதையும் சொல்ல போவதில்லை . நான் பதிவு எழுத வேண்டும் என்று என்னை தூண்டிய என் அருமை மனைவிக்கு என் முதல் நன்றி. சரி பதிவு எழுதலாம் எப்படி எழுதுவது , ப்லோகை எப்படி உருவாகுவது என் நான் தலை சுற்றி நின்ற போது சில மூத்த பதிவர்களின் வலைகளை மேலாக பார்வை இட்டேன் . ஒருவாறு எழுத ஆரம்பித்த போது பதிவை எழுதுவதை விட பதிவுகளை நிறைய வசிக்க ஆரம்பித்தேன் .

அப்படி நான் நேசித்த பதிவர் ஐயா ஷண்முகப்ரியன் , எனது முதல் follower-ஆக வந்து சேர்ந்து எனக்கு ஊக்கம் தந்தார். இன்று படிப்படியா வந்து நூறாவது பதிவை அடைந்திருக்கிறேன் என்றால் அது அவர் போன்றோரின் ஆசியே ஆகும். உங்களின் தாக்கமே எனது விடுகதை – தொடர் .

அடுத்து ஹாலிவுட் பாலா மற்றும் கேபிள் சங்கர் போன்றவர்களின் படைப்பு திறனில் வியந்து இருக்கிறேன். அதுவே எனது வகான்சி திரை விமர்சனம் மற்றும் கத்திரிப்பூ தாவணி பதிவுகளின் தாக்கம் .

அதேபோல் நான் கவிதை போல எதோ எழுதுவதற்கு க. பாலாசி அவர்களின் பதிவின் தாக்கமே .

இப்படி பல பதிவர்கள் தங்களின் படைப்பு திறனில் இருந்து எனக்கு சொல்லி கொடுத்தனர் . இன்னும் நான் வளராத பறவைதான் இருந்தாலும் தன் முதல் சில அடிகளே பறந்த பறவை எதோ சாதனை செய்தது போல் உணருமே அந்த உணர்வே இந்த பதிவு . எனது எழுத்துகளில் பிழைகள் இருக்கலாம் கோர்வையாய் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எழுத வேண்டும் என்ற தவிப்புக்கு, பதிவர்கள் என் மேல் வைத்த அன்புக்கு முன்னால் இவை மறைந்து விடுகிறது.

இன்னும் பல பதிவர்களை பற்றி எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் பதிவு நீளம் போய் கொண்டே இருக்கும் இரு நூறு பதிவு வரை. அடுத்தடுத்த பதிவுகளில் கண்டிப்பாக அவர்களை பற்றி எழுதுவேன். இதுவரை தந்த ஆதரவுக்கும் இனி தரப்போகும் ஆதரவுக்கும் என் நன்றிகள் …..

பிரிவுகள்:மற்றவை

கிரிக்கெட் எளிதாக தெரிந்து கொள்ள

பிரிவுகள்:மற்றவை

மிக சிறந்த பிளேயர்களுள் ஒன்று

மிக சிறந்த பிளேயர்களுள் ஒன்றாக இருக்கும் இந்த பிளேயர் இலவசமாக கிடைக்கிறது.
டவுன்லோட் செய்ய :
http://www.videolan.org/mirror-geo.php?file=vlc/1.0.3/win32/vlc-1.0.3-win32.exe

பிரிவுகள்:தொழில்நுட்பம்

ஒரு ஜென் (ஜெம்) கதை


ஒரு ஊரில் அறிவு மிகுந்த ஜென் துறவி வாழ்ந்து வந்தார் . ஊருக்கு வெளியில் ஆசிரமம் அமைத்து தன் மாணவர்களுக்கு வாழ்கையை பாடமாக சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் . அறிவும் அனுபவமும் மிக்க அந்த துறவியிடம் பாடம் கற்க நிறைய மாணவர்கள் வந்து விரும்பி கற்றனர். அப்படி கற்க வருபவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள் அல்லவா .

அவர்களில் சிலர் தாங்கள் முழுவதும் கற்று அறிந்து விட்டதாகவும் எனவே தங்கள் ஊர்களுக்கு திரும்பி போக முடிவு செய்துவிட்டதாக துறவியிடம் சொல்லி விட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றனர் . அந்த ஜென் துறவியோ எதுவுமே நடக்காதது போலத் புன்முறுவல் புரிந்தார் .

சில வருடங்களுக்கு பிறகு சொல்லாமல் சென்ற அந்த மாணவர்கள் மீண்டும் குருவை தேடி வந்தனர். அவர்களை குரு அன்புடன் வரவேற்றார் . தாங்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் இருந்தும் மன நிம்மதி இல்லை என் குறை பட்டனர் . மீண்டும் அந்த ஜென் துறவி புன்முறுவல் புரிந்தார்.

அவர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்க ஏற்பாடு செய்தார். தேநீர் கோப்பையும் ஊற்றி குடிபதற்காக காலி கோபைகளையும் அவர்கள் முன்னே வைக்கப்பட்டன .
காலி கோப்பைகள் வைரம் பதித்தவை, தங்கம் , வெள்ளி , அழகிய வேலைபாடு கொண்டவை , மண் மற்றும் கண்ணாடியில் செய்யப் பட்டவை என பல கோப்பைகள் இருந்தன . அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த கோப்பைகளை எடுத்துக் கொண்டனர் .

மீதமிருந்த மண் மற்றும் கண்ணாடி கோப்பைகளை கண்ட குரு சொன்னார் , நீங்கள் அனைத்து உயர்ந்த ரக கோப்பைகளை எடுத்து கொண்டதுடன் அருகில் இருந்தவருடன் உங்கள் கோப்பையை ஒப்பிட்டு கொண்டீர்கள். தேநீர் அருந்துவது தான் நோக்கமே அன்றி கோப்பை அல்ல . வாழ்க்கை என்பது தேநீர் போன்றது , பதவி , அதிகாரம் , பணம் போன்றவை கோப்பைகள் போன்றது . பல சமயம் நாம் கோப்பையில் தான் கவனத்தை வைக்கிறோம் ஆகையால் தான் நாம் வாழ்கையை இழக்கிறோம் . கோப்பை தேவையே அன்றி முக்கியமல்ல . இனிமேலாவது கோப்பைக்கு முக்கியத்துவம் தராமல் தேநீருக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்றார்.

வந்த மாணவர்கள் தாங்கள் தவறை உணர்ந்து வாழ்கையின் முக்கியத்துவத்தை உணர்த்திய குருவிற்கு நன்றி கூறி விடை பெற்றனர் .

பிரிவுகள்:சிறுகதைகள்