மின்மினி பூச்சிகள்

முன் இரவில்
வழியில் நின்று
வலை இல்லாமல்
தானே மாட்டி
பின்னிரவு முழுவதும்
வெளிச்சத்தை கொடுத்து 

காலையில் கருகிவிடும்
மின்மினி பூச்சிகள்………
                                                   What Are You Afraid Of

Advertisements
பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

மடிக்கணினி -1

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பது பழமொழி , ஆனால் தற்பொழுதோ மடியில் கணம் இருந்தால் வழியில் பயமில்லை என்பது புதுமொழி . ஆம் அப்படி பலரது மடியில் தவழ்ந்து கன நேரம் கூட பிரியாமல் நம்மில் ஓர் அங்கம் ஆகிவிட்ட மடிக்கணிணியை பற்றி தான் பார்க்கப் போகிறோம் .

கணிணி இல்லாத அலுவலகமே இல்லை என்ற நிலையை அடுத்து கணிணி இல்லாத வீடு என்பதை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம் . தொலைகட்சியின் இடத்தை எட்டி விடும் தூரத்தில் தான் கணிணியின் வளர்ச்சி இருக்கிறது . இந்த குறுகிய காலத்தில் கணிணியின் வளர்சிக்கு பெரிதும் உதவி இருப்பது மடிக்கணிணி வகையாகும் . மடிக்கணிணி வந்த பிறகு தான் கணிணியின் விலை குறைந்து நடுத்தர மக்கள் வாங்கும் நிலை வந்தது .
ஏற்கனவே கணிணி அசெம்பிள் செய்வதை பற்றி நாம் பார்த்து விட்டதால் மடிக்கணிணி வாங்குவது பற்றியும் அதை பராமரிப்பது பற்றியும் பார்க்கலாம் .

மடிக்கணிணி பல்வேறு வகைகளில் கிடைத்தாலும் நம் பயன்பாட்டிற்கு ஏற்ப வாங்க வேண்டும் . பொதுவாக என்ன விசயங்களில் நாம் கவனம் கொள்ள வேண்டும் எனில் மடிக்கணிணியுடன் வரும் வெப் கேமரா , விரல் ரேகை மூலம் லாக் செய்வது , பாட்டரி, எடை , திரை அளவு ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும் . இதில் எது தேவை என்பதை கரத்தில் கொண்டு வாங்க வேண்டும் . பொதுவாக மடிக்கணிணி எடை குறைந்த அளவில் வாங்க வேண்டும். திரை அளவு ஆகவே திட்டமிட்டு தொடரும் எடை அளவும் கூடும். 6 செல்ஸ் மற்றும் 9 செல்ஸ் பேட்டரி இருந்தாலும் 9 செல்ஸ் பேட்டரி கொண்டு அதிக நேரம் வேலை செய்யலாம் ஆனால் அதை நிறுவும்போது மடிக்கணிணியின் எடை கூடவும் செய்யும் .

அதிகப்படியான வசதிகள் அதிக விலை உள்ளவையாகவும் அடிக்கடி உபயோகப் படுத்த முடியாமலும் இருக்கும் .

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – பனிரெண்டாம் வகுப்பு

பிப்ரவரி 2, 2010 10 பின்னூட்டங்கள்

சரி நீங்கள் விண்டோஸ் reinstall செய்கிறீர்கள் எனில் அப்போது மீண்டும் OS activate செய்ய வேண்டுமா எனில் தேவை இல்லை . உங்கள் கணிணியில் உள்ள குறிப்பிட்ட file மட்டும் போதும் அதில் ஏற்கனவே உங்கள் கணிணியை பற்றி குறிக்க பட்டு இருக்கும் .
மேற்கண்ட file ஐ கோப்பி செய்து விட்டு reinstallation முடித்த உடன் மீண்டும் அதே இடத்தில் பேஸ்ட் செய்யும் போது நமது கணிணி activate செய்ய பட்டு விடும் .

கணினியை நீங்கள் விண்டோஸ் bootable cd மூலம் பூட் செய்து ரிப்பேர் option தேர்ந்தெடுத்து செய்யும் போது இதை செய்ய தேவை இல்லை . அதே போல் நீங்கள் ரிப்பேர் செய்யும் போது கணிணியில் உங்கள் C டிரைவ் இல் உள்ள file கள் எந்த பாதிப்பும் அடையாது .

விண்டோஸ் OS இன்ஸ்டால் முடிந்த உடன் ஆட்டோமாடிக் அப்டேட்ஸ் enable செய்து கொள்ள வேண்டும் . இதன் மூலம் நம் இனத்தில் இருக்கும் நேரத்தில் கணினியானது அதுவே அப்டேட்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளும். பின்னர் நமக்கு தேவையான இப்போது மொதேர்போர்ட் சத் இல் . உள்ள இப்போது இல்லாதவர்கள் அப்டேட் செய்வதற்கு விண்டோஸ் XP SP3 அப்டேட்ஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

SERVICES.MSC மூலம் இதை நாம் enable செய்யவோ disable செய்யவோ முடியும் .
அப்டேட்ஸ் என்பது விண்டோஸ் இல் ஏற்படும் பிழைகளை நீக்குவதற்கும் , upgrade செய்வதற்கும் ,புதிய மாற்றங்களை உட்புகவும் பயன்படுதபடுவதாகும் .
இவை patches ஆகவோ சர்வீஸ் package ஆகவோ வெளிவரும் .

இப்போது மதர்போர்ட் cd இல் இருந்து டிரைவர் களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முதலாவதாக சிப்செட் இன்ஸ்டால் செய்யவும் . பின் வரிசையாக VGA, ஆடியோ , நெட்வொர்க் டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் .
இதை தவிர ஏதேனும் ஹாட்பிக்ஸ் கள் கொடுக்கப் பட்டிருந்தால் அதனையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முடிந்தால் டிரைவர்களை இன்னொரு cd இல் backup எடுத்து கொள்ள வேண்டும் . அல்லது நமது கணிணியின் மற்றொரு partition இல் காப்பி செய்து கொள்ள வேண்டும் . டிரைவர் கள் அனைத்தும் இன்ஸ்டால் செய்து முடித்த வுடன் கணிணியை restart செய்வது அவசியம் .

device மேனேஜர் க்கு சென்று கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள டிரைவர்கள் பற்றியும் அதன் பதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளலாம் .

மேற்கண்ட படத்தில் device மேனேஜர் அக்செஸ் செய்வது கன்ட்ரோல் பனேல் வழியாக செல்லுமாறு உள்ளது . இது தவிர மை கம்ப்யூட்டர் ஐ ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்தீஸ் டேப் செலக்ட் செய்தால் அது சிஸ்டம் ப்ரோபெர்தீஸ் மெனு வை ஓபன் செய்யும் .
இதன் மூலமாகவும் device மேனேஜர் ஐ ஓபன் செய்யலாம் .

இதுவரை கணிணி அசெம்பிள் செய்வதை பற்றி எளிய நடையில் தந்துள்ளேன் . என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் . விரைவில் மடிகணினி பற்றிய பதிவுகளுடன் சந்திக்கிறேன் . அதுவரை சூப்பர் கம்ப்யூட்டர் இன் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துகிட்டு இருங்க …..

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – பதினோராம் வகுப்பு

கணிணியில் OS இன்ஸ்டால் செய்ய தேவையானவை விண்டோஸ் XP cd , மதர்போர்ட் டிரைவர் cd மற்றும் தேவையான மென்பொருள் தொகுப்புகள் .
முதலில் விண்டோஸ் XP bootable cd மூலம் கணிணியை பூட் செய்ய வேண்டும் . பின்னர் setup files load ஆகும் .


F8 பட்டன் அழுத்துவதன் மூலம் நாம் மைக்ரோசாப்ட் விதிகளுக்கு கட்டுப்பட்டு OS இன்ஸ்டால் செய்ய உள்ளோம் என்பதை குறிக்கும்.
முதல் option விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதற்கும் இரண்டாவது option விண்டோஸ் file பழுது பட்டு இருந்தால் பயன் படும் .
மேற்கண்ட படத்தில் ஒரு partition மட்டும் உள்ள ஹார்ட் டிஸ்க் பயன் படுத்தப்பட்டு உள்ளது . தற்போது அதிக அளவுள்ள ஹார்ட் டிஸ்க் கிடைப்பதால் நாம் தேவையான அளவு பிரித்து பார்மட் செய்த பின் OS இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் .

இன்ஸ்டால் முடிந்து restart ஆகும் போது பூட் வித் cd option ஐ பயன் படுத்த கூடாது .
இப்பொழுது நிறுவியுள்ள OS க்கு அண்டி வைரஸ் மென்பொருள் ஒன்றை நம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . இல்லையெனில் கேளே உள்ள படத்தில் உள்ளதை போல் வந்து நமக்கு நினைவூட்டும் .
அண்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்வது பற்றி பின் வரும் வகுப்புகளில் பார்க்கலாம். இப்போது நாம் OS இன்ஸ்டால் செய்தவுடன் அதை எவ்வாறு activation செய்வது என்று பார்க்கலாம் .

பெரும்பாலும் முதல் option மூலம் தான் activation கள் அதிகமாக செய்யபடுகிறது . இதற்கு கணிணி இணைப்பு அவசியம் வேண்டும் . அத்துடன் OS சீரியல் கீ தேவைப்படும் . இந்த கீ ஆனது நாம் வாங்கிய விண்டோஸ் XP cd உடன் வரும் .

பரவலாக நாம் ஒர்ஜினல் OS வாங்குவது இல்லை அதற்கு காரணம் விலை ஒன்றுதான் . சரி நீங்கள் நண்பர்கள் யாரிடம் இருந்தாவது வாங்கி இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள் . உங்களிடம் இணைய இணைப்பும் இல்லை எவ்வாறு அதை activate செய்வது , எப்படி OS ஐ முழுமை படுத்துவது .

அதற்காக தான் activator கள் பயன்படுகின்றன . இந்த முறை பயன் பாட்டில் வைரஸ் பரவுவது அதிகமாகும் . ஏனனில் இவை யாவும் ஸ்கிரிப்ட் மூலம் இயக்கப் படுகிறது . அதிக பயன் பாட்டில் இவை இருந்தாலும் இவற்றை பயன் படுத்துவது குற்றமே . ஆகவே இதனை பற்றி அதிகம் சொல்ல போவதில்லை .

அடுத்த வகுப்பில் reinstall செய்வது பற்றி ….அதுவரை விண்டோஸ் 8 வருமா வராதா ….

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – பத்தாம் வகுப்பு

பிப்ரவரி 1, 2010 2 பின்னூட்டங்கள்

கணிணியை பார்மட் அடிப்பது என்பது மிக எளிதான வேலை தான் . ஆனால் கணிணியை தேவையான அளவு partition பிரித்து நமது தேவைகேற்ப பிரித்து பின்னர் அதை FAT32 ஆகவோ NTFS ஆகவோ மாற்றுவது தான் வேலையே .

முதலில் partition பிரிப்பது எதற்கென்றால் ஒரே ஹார்ட்டிஸ்கில் நம் டேட்டா வை வைத்தால் பராமரிப்பது எளிதாக இருக்காது . மேலும் ஹார்ட்டிஸ்கின் செயல்பாடும் குறைந்து விடும் .

ஹர்ட் டிஸ்க் பார்மட் செய்ய பல வழிகள் இருந்தாலும் கிழ்கண்ட சிலவை அதிகம் பயன்படுகின்றன .

விண்டோஸ் bootable cd (FDISK)
தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் (partition magic )
விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்யும் போதே பிரிப்பது .


primary partion OS இன்ஸ்டால் செய்வதற்கு பயன்படும் . Extended மற்றும் logical partition கள் டேட்டா கையாள்வதற்கு பயன்படும் . ஆக OS இன்ஸ்டால் செய்வதற்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும் . இல்லைஎனில் ஒவ்வொரு விண்டோஸ் OS வேர்சின் னுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் சைட் இல் குறிபிட்டு உள்ளனர் . எடுத்துகாட்டாக விண்டோஸ் xp SP2 க்கு எவ்வளவு தேவை என பார்க்க ,
http://support.microsoft.com/kb/837783

பொதுவாக பார்மட் செய்யும் போது quick பார்மட் option ஐ தவிர்ப்பது நல்லது . புல் பார்மட் option எனில் ஹார்டிஸ்க் bad clusterkal குறைவதற்கான வைப்பு உள்ளது .


விண்டோஸ் இல் டிஸ்க் managament option மூலம் நாம் ஹர்ட் டிஸ்க் partition ஐ மாற்றி அமைக்கலாம் .ஆனால் primary partition ஐ மாற்றவோ பிரிக்கவோ இயலாது . மிக தேவையான தரணங்களில் மட்டுமே ஹார்ட் டிஸ்க் பார்மட் அடிக்கப்பட வேண்டும் . அடிக்கடி பார்மட் செய்தால் கண்டிப்பாக தன் செயல் திறனை ஹார்ட் டிஸ்க் இழந்து விடும் .

ஹார்ட் டிஸ்க் ஐ maintenance செய்வதற்கு விண்டோஸ் இல் option உள்ளது . தேப்ரக்மேண்டதியன் மற்றும் Error செக்கிங் மூலமாக நாம் சரி செய்து கொள்ளலாம் . அல்லது தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் கள் முலமும் சரி செய்து கொள்ளலாம் .

அடுத்த வகுப்பில் நாம் விண்டோஸ் xp OS இன்ஸ்டால் செய்வது மற்றும் விண்டோஸ் OS மூலம் பார்மட் செய்வது என இரண்டையும் காணலாம் . நெக்ஸ்ட் மீட் பண்ணு வோம் , அதுவரை …. பில் கேட் பொண்ணை பாத்துகிட்டே இருங்க …

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – ஒன்பதாம் வகுப்பு

முதலில் காபினெட் உடன் SMPS யை அசெம்பிள் செய்ய வேண்டும் . பின்னர் மதர் போர்டு ஐ காபினெட் உடன் இன்னைக்க வேண்டும் . மதர் போர்டு காபினெட்டில் அசெம்பிள் செய்த வுடன் அதன் circuit எதுவும் காபினெட்டில் படாதவாறு சரி செய்து கொள்ள வேண்டும் . அவ்வாறு சரி செய்யா விடில் ஷார்ட் circuit ஏற்பட்டு போர்டனது பழுதாகிவிடும் . ஆகவே போர்டு அசெம்பிள் செய்யும் போது மட்டும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் . அடுத்ததாக போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும் . பொதுவாக ப்ரோசெச்சொரைன் ஒரு பக்கம் மட்டும் அம்புக்குறியிட்டு கட்டப் பட்டிருக்கும் .
அதை கவனத்தில் கொண்டு போர்டில் ப்ரோசெஸரை இணைக்க வேண்டும் . பின்னர் அதன் மேல் கூலர் ஃபேன் பொறுத்த வேண்டும் . கூலர் ஃபேன் பொருத்தும் போதே அதற்கான பவர் கேபிள் இம் பொருத்தி விட வேண்டும் . ப்ரோசெசரின் வெகு அருகிலேயே அதற்கான பவர் source இருக்கும் .

பின்னர் நினைவகத்தை பொறுத்த வேண்டும் . பொருத்தும் போதும் நினைவகத்தின் கடியும் மதர் போர்டில் உள்ள காடியும் பொருந்துமாறு இணைக்க வேண்டும் .

பின்னர் பிரான்ட் பநெல் கோன்னேக்டோர்கள் முழுவதையும் இணைக்க வேண்டும் . மதர் போர்டு உடன் வரும் manual புக்கில் இதை பற்றி விரிவாக இருக்கும்.
இப்போது SMPS இல் உள்ள மதர் போர்டு க்கு பவர் கேபிள் ளை இணைக்க வேண்டும் . பின்னர் பவர் ஆன் செய்து ஒரு பீப் ஒலி கேட்டவுடன் பவர் ஆப் செய்யவும் . அவ்வாறு ஒலி கேட்டல் நம் இனைத்த அணைத்து இணைப்புகளும் மிக சரியாக இருக்கிறது என்று அர்த்தம் .அவ்வாறு இல்லாமல் தொடர் ஒலி எழுபினாலோ அல்லது ஒலி எழுப்ப பட விட்டாலோ நாம் இணைப்பை சரி பார்க்க வேண்டும் . ஒரு வேலை உங்கள் மதர் போர்டில் ஆன் போர்டு ஸ்பீக்கர் இல்லையெனில் நீங்கள் சரியாக இணைதிருந்தாலும் ஒலி வராது. உங்களுக்கு, CPU வில் மானிடர் இணைத்த பின் நீங்கள் சரி பார்க்கலாம் .


பின் ஹார்டிஸ்க் இணைக்க வேண்டும் . இதனை இணைக்கும் போது இரண்டு பக்கம் screw செய்வது அவசியம் . பின்னர் டேட்டா கேபிள் மற்றும் பவர் கேபிள் இரண்டையும் இணைக்க வேண்டும் . ஹார்டிஸ்க் இணைக்கும் முன் அதை சீரியல் நம்பர் நோட் செய்து கொண்டால் பின்னர் வாரேன்டி செக் செய்யும் போது ஹார்டிஸ்கை கழட்டி மாட்ட தேவையில்லை .

அதன் பின் DVDடிரைவ் இணைக்க வேண்டும் .


பின்னர் SMPS இல் இருந்து வரும் பவர் source ஐ ஹார்டிஸ்க் மற்றும் dvd டிரைவ் களுக்கு கொடுக்க வேண்டும் .

மதர் போர்டு பற்றிய எளிதான தகவல் கல் கிலே

A-SATA
B-???
C-GPU
D-Heat Sink
E-LED
F-???
G-PCIe Slot
H-Capacitors
I-PCI Exp Slots
J-AGP Port
K-Audio
L-Ethernet/Firewire
M-USB
N-VGA Port
P-PS/2 Ports
R-Jumpers
S-Coil
T-Power
U-CPU Socket
V-RAM
W-Resistors
X-Chip
Y-Floppy Disk Header
Z-Power
2-Jumpers
3-Battery
4-BIOS
5-IDE Port
6-IDE Port

அனைத்தும் அசெம்பிள் செய்தவுடன் VGA போர்டில் மானிடர் ஐ இணைக்க வேண்டும் . அதன்பின் USB போர்டில் keyboard மற்றும் மௌஸ் ஐ இணைக்க வேண்டும் .இப்பொழுது கணிணி அசெம்ப்ளே செயப் பட்டுவிட்டாலும் .நம்மால் கணினியை இயக்க முடியாது . ஏனனில் ஆபெரடிங் சிஸ்டம் ஏதேனும் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே நம்மால் இயக்க முடியும் .

ஆபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது எப்படி ?

அதற்கு முன் ஹார்ட்டிஸ்கை பார்மட் செய்ய வேண்டும் . அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது அதை பற்றி தான் . வரட்டா ….

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது

கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – எட்டாம் வகுப்பு

ஜனவரி 22, 2010 1 மறுமொழி

ஒரு கணிணியின் செயல்பாட்டினை உணர்த்துவதும் நாம் கொடுக்கும் இன்புட்களை அவுட்புட் களாக பார்க்க உதவுவது மானிடர் ஆகும் . பொதுவாக மானிடர் தான் கணிணியின் முதல் ஈர்ப்பாக அமைகிறது .

மானிடர்களை CRT LCD என இரு வகையாக பிரிக்கலாம். இதில் CRT வகை மானிடர்கள் அனலாக் தொழி நுட்பத்தில் தயாரானவை .இவை எளிதாக கையாள முடியாத, கனமான , அதிக மின்சாரத்தை எடுத்து கொள்பவை . தொடர்ந்து பார்க்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிக வெளிச்சம் கண்ணுக்கு கெடுதலை தரும் . விலை அளவில் பார்க்கும் போது இது மிகவும் சிக்கனமானது . பழுதாகும் பட்சத்தில் எளிதாக சரி செய்யலாம் . உதிரி பாகங்களும் எளிதாக கிடைக்கும் . தற்போது இதே CRT வகை மானிடர் இல் டிஜிட்டல் தொழில் நுட்மபும் சேர்ந்து வருகிறது . அதனால் கட்சிகளும் முன்னை விட சிறப்பானதாக தெரியும் .
இருந்தாலும் இடத்தினை அதிக அளவு ஆகிரமித்து கொள்வதாலும் LCD மானிடர் களின் விலை குறைய துவங்கி உள்ளதாலும் சந்தைகளில் விற்பனை குறைய துவங்கி உள்ளது .

LCD மானிடர் கள் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளன. இதற்கு பெரும் காரணமாய் இருப்பது இது கையாளவதற்கு மிகவும் எளிதானது . அத்துடன் மிக குறைந்த அளவே மின்சாரத்தை எடுத்து கொள்கிறது . இதில் காணும் கட்சிகள் நல்ல துல்லியத்துடன் கிடைகின்றன அதிக நேரம் கணிணியில் வேலை செய்வோர் பெரும்பாலும் விரும்புவது இவ்வகை மானிடர் களே . தற்போது சந்தைகளில் அதிகம் விற்கப்படுவது 20″ ,22″ வகை மானிடர்கள் தான் . ஏனனில் படங்கள் பார்பதற்கும் வேலை செய்வதற்கும் இத்தகைய மாடல்கள் பெரும்பான்மையாக விரும்பப்படுகின்றன .

நாம் LCD வகை கணிணியில் இருந்தாலும் தொழில் நுட்பம் எங்கோ சென்று கொண்டிருகிறது . LCD அடுத்து பிளாஸ்மா வகை மானிடர் கள் வர துவங்கி விட்டன . இவை LCD யை விட எடை குறைவானது அத்துடன் அதனை விட கட்சிகளை சிறப்பாக கட்ட கூடியாது . அனால் மின்சாரத்தை LCD யை விட அதிகமா எடுத்து கொள்ளும் . இதில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் அழுவும் LCD யை விட அதிகமா இருக்கும் . மிகவும் அருகில் சென்று பார்த்தல் காட்சிகளில் சிறிது தெளிவில்லாமல் தெரியும் . இதன் விலை LCD வகையை விட சிறிது அதிகமே .

பாதி வீடுகளில் பிளாஸ்கே இல்லாத போது எங்கே பிளாஸ்மா பற்றி எண்ணுவது .

நாம் வங்கப் போகும் மானிடர் 20″ சாம்சுங் – 7,400 RS

அடுத்த வகுப்பில் இருந்து ஒவ்வன்றாக சேர்த்து அசெம்பிள் செய்ய போகிறோம் .

பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது